2026 அறிவியல் கல்வியறிவின் உலக மாநாடு பெய்ஜிங்கில் தொடக்கம்

2026ஆம் ஆண்டு அறிவியல் கல்வியறிவின் உலக மாநாடு 20ஆம் நாள் சீனாவின் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. 32 நாடுகளின் அறிவியல் துறை, கல்வி துறை, நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனப் பரப்புரைத் துறை அமைச்சருமான லி ஷுலெய் இம்மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

முதலாவது அறிவியல் கல்வியறிவின் உலக மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து கடிதத்தின் வழிகாட்டலின் கீழ், உலகளாவிய அறிவியல் கல்வியறிவின் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கு சீனா ஆக்கப்பூர்வமாக பங்களித்துள்ளது என்று இம்மாநாட்டில் பங்கேற்ற விருந்தினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author