சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 9ஆம் நாள், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜோங்-உன்னுக்கு, வட கொரியா நிறுவப்பட்ட 77ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில்,
கடந்த 77 ஆண்டுகளில், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் தலைமையில், அந்நாட்டின் மக்கள் பாடுபட்டு, சோஷலிசத்தின் பல்வேறு இலட்சியங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளனர். சீனாவும் வட கொரியாவும் பாரம்பரிய நட்புறவு வாய்ந்த நல்ல அண்டை நாடுகளாகும்.
இரு தரப்புறவை, சீராக வளர்ப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் உறுதியான நெடுநோக்குத் திட்டமாகும். வட கொரியாவுடன் இணைந்து, நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு தரப்புறவையும் இரு நாடுகளின் சோஷலிச இலட்சியத்தையும் கூட்டாக முன்னேற்றி, பிரதேசம் மற்றும் உலகின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மேலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.