சீனா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆலோசனை இயங்குமுறை வெளியிட்ட கூட்டறிக்கை

சீனா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆலோசனை இயங்குமுறையின் 2வது கூட்டம் அக்டோபர் 8 மற்றும் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவ், வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புக்கான ஐரோப்பிய ஆணையர் மரோஸ் ஷெஃப்கோவிச்சுடன் இணைந்து இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருதரப்பினரும் நடைமுறைக்கு உகந்த மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டு, ஒருமித்த கருத்துக்களின் பட்டியலை உருவாக்கினர்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டின் சமநிலை, ஏற்றுமதி கட்டுப்பாடு, அறிவுசார் சொத்துரிமை, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான 16 குறிப்பிட்ட ஒருமித்த கருத்துக்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ், இருதரப்பின் கருத்து வேறுபாடுகளை சீராக சமாளிக்கவும், இருதரப்பின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை நிலைப்படுத்தவும் பணியாற்ற வேண்டும் என்றும் இருதரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

You May Also Like

More From Author