2024ஆம் ஆண்டு, சீன-மலேசியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். மலேசியத் தலைமையமைச்சர் அன்வர் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து அவர் கூறுகையில், பொருளாதாரம், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு பற்றிய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்று தெரிவித்தார். அத்துடன், எரியாற்றல், பசுமை தொழில் நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
எண்ணியல்மயமாக்கம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் சீனா பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும், கல்வி, பண்பாடு, அறிவியல் ஆய்வு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிய ஒத்துழைப்புகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷியாவின் காசான் நகரில் நிகழ்த்திய உரையில் தான் கவனம் செலுத்தியதாகவும், உலகப் பாதுகாப்பு, உலக மேலாண்மை, உலக நாகரிகம் உள்ளிட்ட துறைகளிலான கூட்டு பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு பற்றி அவர் வலியுறுத்தினார்.
இது சிறந்தது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவைத் தவிர, மேலதிக நடவடிக்கைகளை சீன அரசு முன்வைத்துள்ளது. தவிரவும், மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு சீனா முக்கியத்துவம் அளித்து, சர்வதேசப் பரிமாற்றத்துக்கான புதிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.