தியஞ்சின் மாநகரில் சீன அரசுத் தலைவர் ஆய்வுப் பயணம்

 

வசந்த விழாவுக்கு முன்பாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தியஞ்சின் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உள்ளூர் மக்களைச் சந்தித்துரையாடினார்.

பிப்ரவரி முதல் நாளில், இம்மாநகரின் ஷிச்சின் மாவட்டத்தின் சின்கோ வட்டத்தைச் சேர்ந்த திலியுபு கிராமத்தினைப் பார்வையிட்டார்.

அப்போது, கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர், வெள்ளப்பெருக்கிற்குப் பின் இப்பிரதேசத்தில் விவசாய உற்பத்தி மீட்சி நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

அதே நாள் பிற்பகல், இம்மாநகரில் பண்டை பண்பாட்டு வீதியில் பயணம் மேற்கொண்ட அவர், வசந்த விழாவுக்கான சந்தை வினியோகம், வரலாற்றுப் பண்பாட்டு மண்டலப் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு நிலைமை முதலியவற்றைப் பார்வையிட்டார். 

You May Also Like

More From Author