சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் காலை, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க தலைவர்கள் அரை ஆண்டுக்குள் பரஸ்பர வருகைகளை மேற்கொண்டது, சீன-அமெரிக்க உறவு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டார். அதோடு, தான் அரசுத் தலைவர் டிரம்புடன் பல்வேறு வழிகளில் தொடர்புகளை நிலைநிறுத்தி, சீன-அமெரிக்க உறவு என்ற இந்தப் பெரும் கப்பலுக்குக் கூட்டாக வழிகாட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இரு தரப்பின் பொருளாதாரம் மற்றும் வர்ததகக் குழுக்கள் புதிய சுற்று கலந்தாலோசனையை நடத்தி, ஒரு புதிய கூட்டு ஏற்பாட்டை எட்டியுள்ளது. இது, இரு நாட்டுத் தொழிற்துறை மற்றும் மக்களுக்கு மட்டுமல்லாது, உலக பொருளாதாரத்துக்கே நல்ல செய்தியாகும். சீனாவும் அமெரிக்காவும், செயற்கை நுண்ணறவு வல்லரசுகளாகும். இவ்விரு நாடுகளும் போட்டியைக் கொண்ட போதிலும், ஒத்துழைப்பு மேற்கொள்ளவும் முடியும் என்பதையும், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

டிரம்ப் கூறுகையில், இரு நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, மேலும் சிறந்த உடன்படிக்கையை எட்ட வேண்டும். செயற்கை நுண்ணறவு பற்றி இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார். 

You May Also Like

More From Author