சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனமாதல் தடுப்பு மற்றும் காடு வளர்ப்பில் ஈடுபட்ட யின் யுஜென் என்பவருக்கு சகோல்ஸ்கி என்ற அமெரிக்கர் நிதி திரட்டி உதவி அளித்தார். இவ்வாண்டுக் கோடையில் சீனாவுக்கு மீண்டும் வந்த சகோல்ஸ்கி , ஒரு காலத்தில் தரிசாகக் கிடந்த அந்தப் பாலைவனம் தற்போது செழிப்பான காடாக மாறியிருப்பதை நேரில் கண்டு வியந்தார். இக்கதை சீனர் பலரின் மனதைத் தொட்டுள்ளதுடன், சீனா மற்றும் அமெரிக்க மக்களுக்கு இடையிலான நட்புறவுப் பரிமாற்றங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது என்று அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.
இக்கதை 1999ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது சீனாவிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் பணி புரிந்த அமெரிக்க ஆசிரியரான சகோல்ஸ்கி தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த போது, யின் யுஜென் என்ற சீன பெண், மௌவுஸு பாலைவனத்தில் மரங்களை நட்டு பாலைவனமயமாதல் தடுப்பு பணியில் முழு மூச்சுடன் பாடுபட்டுள்ளதைக் கண்டறிந்தார். இந்த தகவல் தனது ஆழமாக மனதைத் தொட்டது.
அவளுக்கு உதவியளிக்கும் வகையில், சகோல்ஸ்கி 5000 டாலர் நிதித் திரட்டி அதனை யின்யுச்செனிடம் நன்கொடை வழங்கினார். யின் யுஜென் இந்த 5000 டாலரைப் பயன்படுத்தி, தயக்கமின்றி 50 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கினார்.
இந்த நிகழ்வு நடைபெற்று 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அப்போது நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பசுமையான காடுகளாக மாறியுள்ளன.
தனது பணிக்கு நிதி உதவியளித்த சகோல்ஸ்கியை தேடிக் கண்டுபிடிக்கும் வகையில், யின்யுச்சென் அம்மையார் 2026ஆம் ஆண்டு மே மாதம், இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில், வணக்கம் சகோல்ஸ்கி ஐயா, இக்காணொளியை நீங்கள் பார்த்தால், சீனாவுக்கு மீண்டும் வாருங்கள் என்று அவர் அழைப்பை விடுத்தார். 26 ஆண்டுகளுக்கு முன் உங்கள் 5000 டாலர் நன்கொடையால் வளர்ந்த பசுமையான இக்காடுகளைப் பார்வையிட சீனாவுக்கு வருமாறு ஆனந்த கண்ணீருடன் பெருக்குடன் மனப்பூர்வமான அழைப்பைவிடுத்தார்.
இவ்வாண்டின் கோடைக்காலத்தில், பாலைவனமயமாதல் தடுப்பு நாயகியும் சகோல்ஸ்கியும் பாலைவனத்தில் உருவாக்கப்பட்ட இந்த பசுமையான சோலையில் மீண்டும் சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
சீன-அமெரிக்க உறவின் வரலாறு, இரு நாட்டு மக்களிடையே நட்பார்ந்த பரிமாற்றம் மேற்கொண்டு வரும் வரலாறு ஆகும். கடந்த காலத்தில் மக்களால் எழுதப்பட்டு, எதிர்காலத்திலும் மக்களால் உருவாக்கப்படும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
இந்த கூற்றை போலவே, யின் யுஜென் மற்றும் சகோல்ஸ்கி இடையேயான நாடு கடந்த நட்புறவே, சீன – அமெரிக்க மக்கள் தொடர்பில் மனதை நெகிழ வைக்கும் கதைகளில் ஒன்றாகும்.
