நிலா விழாவின் முதல் நாளில் நாடு முழுவதும் 24.3 கோடி சுற்றுப்பயணங்கள் பதிவு

Estimated read time 0 min read

சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு நிலா விழா விடுமுறையின் முதல் நாளில் நாடு முழுவதும் வெளியூருக்குச் செல்லும் பயணங்களின் எண்ணிக்கை 24.3 கோடிக்கும் அதிகமாகும். இது விழாவுக்கு முந்தைய நாளை விட 6.4 விழுக்காடு அதிகம். நெடுஞ்சாலை, இருப்புப்பாதை, பயணியர் விமானங்கள் மற்றும் கப்பல்களின் மூலம் பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மக்களின் பயணங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், போக்குவரத்து வாரியங்கள் போக்குவரத்துத் திறன்களை அதிகரித்துள்ளது. செப்டம்பர் 25ஆம் நாள் நாடு அளவில் 2 கோடியே 23 இலட்சத்து 40 ஆயிரம் பேர் இருப்புப் பாதை மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். பெய்ஜிங்—ஷாங்காய், பெய்ஜிங்—குவாங்சோ, பெய்ஜிங்—ஹார்பின் முதலிய வழித்தடங்களில் இரவு ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author