2024ஆம் ஆண்டு, உக்ரைன் நெருக்கடி மற்றும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தொடர்கின்றன. உலகப் பொருளாதாரயின் மீட்சி பலவீனமாக இருக்கிறது.
பயங்கரவாதம், காலநிலை மாற்றம் முதலிய பாரம்பரிய பாதுகாப்பு சாரா அறைகூவல்கள் தீவிரமாகி வருகின்றன. சர்வதேச ஒழுங்கிற்கும், “உலகின் தென் பகுதி” நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கும் இது ஒரு சோதனையாகும்.
உலக மேலாண்மையில் “உலகின் தென் பகுதி” படிப்படியாக வலுவடைந்து வருகிறது. சீனா, இந்தியா, பிரேசில் முதலிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் விரைவான வளர்ச்சி, உலகப் பொருளாதார ஆற்றலின் சமநிலையை மாற்றி, இதர வளரும் நாடுகள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கும் வளர்வதற்கும் அனுபவங்களை வழங்கி, இந்நாடுகளின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
உலக மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் விதம், மனித குல பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் கண்ணோட்டம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, மூன்று உலக முன்மொழிவுகள் ஆகியவற்றை சீனா முன்வைத்துள்ளது.
சீனாவின் மேலாண்மை அனுபவங்கள் மற்றும் விவேகத்தின் பரவலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுகள், யுகத்தின் ஓட்டம் மற்றும் சர்வதேச போக்கிற்கு ஏற்ப, எதிர்கால திசையை உறுதிப்படுத்தி, பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றியுள்ளன.
உலகின் தென் பகுதி மறுமலர்ச்சி அடைந்து, புதிய ஒத்துழைப்பு மாதிரியின் மீது ஆராய்ச்சி செய்யும் போக்கில், வளர்ந்த நாடுகளுடனான தொடர்பைப் புறக்கணிக்கவில்லை. தொடர்வல்ல வளர்ச்சியைச் சீர்குலைக்க கூடிய அமைப்பு முறையை முறியடிக்க இது பாடுபட்டு வருகிறது. தொடர்புடைய நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் அதே வேளையில், புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை நாடி வருகின்றது.