சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் அரசின் பணியறிக்கையை வழங்கினார்.
அந்த அறிக்கையின் படி, இவ்வாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் இலக்கு 5 விழுக்காடாக வகுக்கப்பட்டு, உலகின் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இது, சந்தையின் திட்டமிட்ட இலக்குக்குப் பொருந்திந்தாகும்.
அதோடு, கடந்த 2 ஆண்டுகாலத்தில் இருந்ததற்கும் இது சமமாகும். வேலை வாய்ப்புகளின் விழுக்காட்டை நிதானப்படுத்தி, நெருக்கடியைத் தடுத்து, பொது மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சீன அரசின் மன உறுதி இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று சில வெளிநாட்டு செய்திஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
இவ்வாண்டில் சீன அரசின் முதல் 10 முக்கியப் பணி கடமைகளில், நுகர்வுகளை ஊக்குவித்து, முதலீட்டுப் பயன்களை மேம்படுத்துப் பன்முகங்களில் உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவது என்பது முதலிடத்தில் உள்ளது.
இவ்வாண்டின் வசந்த விழா காலத்தின் போது, சீனாவில் நுகர்வு பெரிதும் உயர்ந்து வருவது, இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல தொடக்கமாக விளங்கியது. கடந்த சில நாட்களில், பல உலகளவாவிய நாணய நிறுவனங்கள் 2025ஆம் பொருளாதார முன்னாய்வு அறிக்கைகளை வெளியிட்டன. அவற்றின்படி, சீனாவின் நுகர்வு மற்றும் சேவைத் துறை மேலும் முன்னேற்றமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டின் அரசின் பணியறிக்கை, செயற்கை நுண்ணறிவில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. பெரும் மாடலின் பெருமளவு பயன்பாடு, இணையத்துடன் கூடிய புதிய எரியாற்றல் நுண்ணறிவு வாகன வளர்ச்சி, நுண்மதி நுட்ப இயந்திர மனிதர் முதலியவற்றுக்கான ஆதரவு, இதில் அடங்குகிறது. நடைபெற்று வருகின்ற கூட்டத்தொடரில் சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல் சீராக வெளியிடப்பட்டுள்ளது என்று அமெரிக்க சி.என்.என் கருத்து தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் பொருளாதார அதிகரிப்பு எனும் இலக்கை நனவாக்குவதில் சீனா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவின் 5 விழுக்காட்டு அதிகரிப்பு விதிகம், உலகத்திற்கு மேலதிகமான, புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.