நிபுணர்கள், தொழில் முனைவோர்கள், கல்வி அறிவியல், கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் கூட்டம் ஜனவரி 19ம் நாள் நடைபெற்றது. சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, அரசு பணியறிக்கை, 15வது ஐந்தாண்டு திட்ட வரைவு ஆகியவற்றுக்கான கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், 15வது ஐந்தாண்டு திட்ட வரைவு தொடர்பான கட்சி மத்திய கமிட்டியின் ஆலோசனைகள், மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தின் கோரிக்கைகள் ஆகியவற்றை ஆழமாக நடைமுறைப்படுத்தி, உயர்தர வளர்ச்சியின் உறுதித்தன்மையுடன் வளர்ச்சி சூழலின் உறுதியின்மையைச் சமாளிக்க வேண்டும் என்றும், தத்தமது மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் நடைமுறைகளுக்கிணங்க, முன்மொழிவுகளை வழங்கி, உயர்தர வளர்ச்சி முன்னெடுப்புக்கு மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
