பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 105-வது நிறுவன தின விழா
தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் அர்லேகர் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் புதிய சேவை மற்றும் புதிய கிளைகளை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் பேசிய குடியரசு துணைத்தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்தார். இந்தியா புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், புதிய வேகத்துடனும் முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.
