புதிய காலநிலை நிலைமையில் 4 முன்மொழிவுகளை ஹென்ட்செங் முன்வைத்தல்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், துணை அரசுத் தலைவருமான ஹென்ட்செங் உள்ளூர் நேரப்படி நவம்பர் 11ஆம் நாள் துருக்கியில் நடைபெற்று வரும் ஐ.நாவின் 31ஆவது காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் அந்தால்யா தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர், காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பது மனிதகுலத்தின் கூட்டு லட்சியமாகுமென சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், உலகக் காலநிலை மாற்றத்துக்கான பாதகமான அம்சங்கள் தீவிரமாகியுள்ள புதிய சூழலில் 4 முன்மொழிவுகளையும் ஹென்ட்செங் முன்வைத்தார்.

முதலாவது, பொது இலக்கைக் கொண்டு கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, பசுமை மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும். மூன்றாவது, காலநிலை சீற்றத்தின் தடுப்பை வலுப்படுத்துவதோடு, காலநிலையின் மீள்தன்மையை உயர்த்த வேண்டும். நான்காவது, திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையில் ஊன்றி நின்று சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author