‘டிட்வா’ புயலில் சேதமடைந்த பாலங்களை சீரமைக்க இலங்கைக்கு சீனா உதவி

இலங்கையில் ‘டிட்வா’ புயலில் சேதமடைந்த 14 பாலங்களை சீன உதவித் திட்டத்தின் கீழ் சீரமைக்க சீனாவும் இலங்கையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இலங்கையின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அசிரி கருணவர்தன இலங்கைக்கான சீனத் தூதர் வெய் ஹுவாசியாங் ஆகியோர் திங்கள்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். “கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க உதவி கோரி இலங்கை தரப்பு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, கள ஆய்வுகளை மேற்கொள்ள சீன நிபுணர்கள் குழு உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது; மேலும், இத்திட்டங்களுக்கான ஒப்புதல் நடைமுறைகளைச் சீனத் தரப்பு விரைவுபடுத்தியது,” என்று வெய் ஹுவாசியாங் கூறினார். சீனத் தரப்பின் உதவிக்கு நன்றி தெரிவித்த கருணவர்தன, இத்திட்டம் பேரிடருக்குப் பிந்தைய போக்குவரத்துச் சிக்கல்களைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், இலங்கையின் ஒட்டுமொத்த போக்குவரத்து உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டு இறுதியில் வீசிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author