டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும், ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவர் சரணடைய வேண்டும் என்று தெரிவித்தார்.
கெஜ்ரிவால் பிணையில் வெளிவந்தாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும். மக்கள் மறக்க மாட்டாா்கள் என கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்றும், ஆனால் அவர் எங்கு பிரச்சாரம் செய்தாலும், மதுபான ஊழல் மக்கள் நினைவில் இருக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
சந்தேஷ்காலி சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, வாக்கு வங்கி அரசியலுக்காக மதத்தின் அடிப்படையில் பெண்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், ஆனால் அதனை தடுக்க மேற்கு வங்க முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.