மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கு ஞானசுந்தரம் ஆற்றிய பங்களிப்பு நினைவு கூரப்படும் என்று கூறினார்.
தனது எழுத்துக்கள் சமூகத்தின் கலாச்சார உணர்வை அவர் செழுமைப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசுந்தரத்தின் படைப்புகள் வருங்கால தலைமுறை வாசகர்களுக்கும், அறிஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அவருடன் உரையாடியதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோரும் ஞானசுந்தரத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
