பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவை ஆழப்படுத்தும் கூட்டு அறிக்கையைச் சீன மக்கள் குடியரசும் பெரு குடியரசும் கூட்டாக வெளியிட்டன.
ஐ.நா.சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் பின்பற்றி, அனைத்து நாடுகளின் இறையாண்மை சுதந்திரம், உரிமை பிரதேச ஒருமைப்பாடு மற்றும் முக்கிய நலன்களை மதிக்க வேண்டும் என்பதை இருதரப்புகளும் உறுதிப்படுத்தின.
மேலும், இவ்வறிக்கையில் ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பெரு உறுதியாக பின்பற்றி வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இரு நாடுகளின் உயர் நிலை தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும் இரு நாட்டு அரசுகள், இடங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையிலான பரிமாற்றத்தை முன்னேற்றவும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
அதோடு, பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலக அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று இரு தரப்புகள் தெரிவித்தன.
உலக வளர்ச்சி முன்மொழிவு கட்டுக்கோப்புக்குள் சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பெரு தரப்பு அங்கீகரித்து பாராட்டியதும், உலக வளர்ச்சி முன்மொழிவுக் குழுவில் பெரு சேர்வதைச் சீனா பாராட்டியதும் இந்தக் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.