ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு..! இன்று முதல் ஐடி கார்டு கட்டாயம்..!

Estimated read time 1 min read

ரயில்வே வருவாய் இழப்பைத் தடுப்பது, போலி டிக்கெட்டுகளை ஒழிப்பது மற்றும் சலுகை கட்டணத் துஷ்பிரயோகங்களைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் இந்த தீவிர டிக்கெட் பரிசோதனை பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் முழுவதும் சிறப்புப் பயணச்சீட்டுப் பரிசோதனை இயக்கத்தை தீவிரமாக நடத்த உள்ளதுமத்திய ரயில்வே மண்டலம் .

அனைத்து ரயில் நிலையங்களிலும், உள்ளூர் புறநகர் ரயில்களிலும் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முறையான பயணச்சீட்டு மற்றும் அசல் அடையாளச் சான்றுகளை உடன் வைத்திருக்குமாறு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சலுகைக் கட்டணங்கள் மற்றும் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பயணிக்கும் பயணிகள், தங்களின் தகுதியை உறுதிப்படுத்த ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையைக் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். நகல் சான்றிதழ்களோ அல்லது கைபேசியில் உள்ள புகைப்படங்களோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பாஸ்போர்ட், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் அல்லது புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

ஒரு பயணச்சீட்டில் பலர் குழுவாகப் பயணிக்கும் சூழலில், அந்தச் சீட்டில் பெயர் இடம்பெற்றுள்ள பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது அசல் அடையாளச் சான்றை வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அந்தப் பட்டியலில் உள்ள அனைத்துப் பயணிகளும் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், இ-பாஸ் (E-Pass) அல்லது பி.டி.ஓ (PTO) மூலம் பயணிப்பவர்களும் முறையான பயண ஆதாரத்தை மாற்றி, அசல் அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும்.

செல்லுபடியாகும் பயணச்சீட்டு அல்லது உரிய ஆவணங்கள் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’ திருத்தத்தின் கீழ் ரூ. 250-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்க பயணிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You May Also Like

More From Author