வெளியான அதிர்ச்சித் தகவல்கள்..! இரட்டைக் குடியுரிமை இல்லாத ஓமானி குடிமகன் ஒருவர், இஸ்ரேல் செல்லும் விமானத்தில் துணை விமானியாக எப்படி ஆனார்? 

Estimated read time 1 min read

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ (FZ1073) பயணிகள் விமானத்தில் இந்தியக் கேப்டனைக் கத்தியால் குத்தி, விமானத்தைக் கடத்த முயன்ற ஓமானி துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமிக்கு வேறு எந்த நாட்டின் இரண்டாவது குடியுரிமையும் (Dual Citizenship) இல்லை என்ற திடுக்கிடும் தகவல் ‘தி ஜெருசலேம் போஸ்ட்’ விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இஸ்ரேல் தேசத்தை அங்கீகரிக்காத மற்றும் தூதரக உறவு இல்லாத ஓமன் நாட்டின் குடிமக்கள் இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களை இயக்க அனுமதி கிடையாது. இதனால், அந்த ஓமானி பைலட் தனது இரண்டாவது பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி காக்பிட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவருக்கு வேறு நாட்டின் குடியுரிமையே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், தீவிரவாதக் கருத்துக்கள் காரணமாக ஓமன் நாட்டிலேயே விமானம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு ஆபத்தான நபர், உலகின் அதிநவீன உளவு அமைப்புகளான மொசாட் (Mossad) மற்றும் ஷின் பெட் (Shin Bet) ஆகியவற்றின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, 174 பயணிகளுடன் சென்ற இஸ்ரேல் விமானத்தின் காக்பிட்டிற்குள் எப்படி நுழைந்தார் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய வெளிநாட்டு விமான நெறிமுறைகளை மீறி ஃப்ளைதுபாய் நிறுவனம் செயல்பட்டதா அல்லது பாதுகாப்புச் சோதனையில் உளவுத்துறை கோட்டை விட்டதா என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்துப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “விமானிகளை முன்கூட்டியே பரிசோதிப்பதில் மிகப்பெரிய குறைபாடு உள்ளது” என ஒப்புக்கொண்டுள்ளார். ஓமானி பைலட்டை சவூதி அரசு யுஏஇ-யிடம் (UAE) ஒப்படைத்துள்ள நிலையில், பாதுகாப்பு வளையத்தில் ஏற்பட்ட இந்த மாபெரும் தவறு குறித்து இஸ்ரேலிய உளவு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

You May Also Like

More From Author