ஊடுருவல் முயற்சி – 2 பேரை சுட்டுக்கொன்ற பி.எஸ்.எப். படை வீரர்கள்..!

Estimated read time 0 min read

சர்வதேச எல்லை வழியாக நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 நபர்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், எச்சரிக்கையை மீறி அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதால் அவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author