கனடாவும் இந்தியாவும் தங்கள் தடைபட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.
இராஜதந்திர பதட்டங்கள் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த G20 உச்சிமாநாட்டில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அங்கு அவர்கள் ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த விவாதங்களை தொடங்க ஒப்புக்கொண்டனர்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கனடாவும் இந்தியாவும் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன
