ஷென்சோ-20 எனும் விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பும் பணி ஒத்திபோடப்பட்ட நிலையில், அவசர தீர்வுத் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கியுள்ளன. ஷென்சோ-20 எனும் விண்வெளி ஓடம் மீதான பன்முக பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தரையில் இந்த ஓடம் திரும்புவது தொடர்பான பன்நோக்கு பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு பணிகள் திட்டப்படியே செவ்வனே முன்னேறி வருகிறன.
தற்போது, விண்வெளி நிலையத்தில் ஒருங்கிணைப்பு ஓடம் சீராக செயல்படுகிறது. இதில் தங்கியுள்ள ஷென்சோ-20 மற்றும் ஷென்சோ-21 இயல்பாக வாழ்ந்து, கூட்டாக அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
