ஐ.நா பாதுகாப்பவையின் தடை அமைப்புமுறை தொடர்ந்து சீரமைக்கப்பட வேண்டும்:சீனா

ஐ.நா பாதுகாப்பவையின் தடை அமைப்புமுறை தொடர்ந்து சீரமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீனாவின் துணைப் பிரதிநிதி சுன்லெய் தெரிவித்தார்.

பாதுகாப்பவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு அதிகாரப்பூர்வமற்றக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில்,

சர்வதேச சமூகத்தில் பாதுகாப்பவையின் தடை அமைப்புமுறை பற்றிய புரிந்துணர்வை ஐ.நா பரவல் செய்ய வேண்டும் என்றும், தடை நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் அதேவேளையில், பட்டியலிலிருந்து பெயரை நீக்குதல் மற்றும் விலக்கு அளித்தல் போன்றவற்றையும் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தடை விப்பதானது ஐ.நா சாசனத்தின்படி பாதுகாப்பவைக்கு அளிக்கப்பட்ட சிறப்பான அதிகாரமாகும். இதனை நடைமுறைப்படுத்தும் போக்கில் தொடர்புடைய நாடுகளின் பொருளாதாரத்துக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பணிக்காக்கும் இலக்கிற்குத் துணை புரியும் வகையில், பாதுகாப்பவை தடை அமைப்புமுறையைத் தொடர்ந்து மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புவதாக சுன்லெய் தெரிவித்தார்.

You May Also Like

More From Author