21ஆவது நூற்றாண்டிற்கான கடல்வழிப் பட்டுப்பாதையைக் கூட்டாகக் கட்டியமைக்கும் முன்மொழிவு 2013ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் முன்வைக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில், இந்தக் கடல்வழிப் போக்குவரத்து மூலம் சீனாவுக்கும், தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு பெரிதும் முன்னேற்றப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்காசியா ஆகியவற்றுக்குச் செல்லும் பல நேரடி கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை சீனா புதிதாகத் தொடங்கியது. கொள்கலன்கள் சீனாவிலிருந்து 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்பட முடியும். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சீனாவிலுள்ள 11 சர்வதேச கப்பல் போக்குவரத்து துறைமுகங்கள் சுமார் 220 கோடி டன் எடையுள்ள கொள்கலன்களைக் கையாண்டுள்ளன. இந்த அளவு சீனாவில் கையாளப்பட்ட மொத்த சரக்கு தொகையிலும் 50 விழுக்காட்டுக்கு அதிகமாகும்.
