திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

Estimated read time 0 min read

திருப்பதி அருகே உள்ள பத்மாவதி அம்மன் கோயிலில் வளர்க்கப்படும் கோயில் யானை, பாகனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம், அவ்வாறு நடத்தப்பட்ட ஊஞ்சல் சேவையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் கோயில் வளாகத்தில் வலம் வந்தன.

அப்போது ஒருயானை துதிக்கையால் பாகனை தூக்கி வீசியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு பாகன் அந்த யானையை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவரையும் கீழே தள்ளிவிட்ட யானை காலால் மிதித்து தாக்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பாகனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

You May Also Like

More From Author