மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா கட்டாயம்!

Estimated read time 1 min read

இந்தியர்கள் விசா இன்றி மலேசியாவிற்குள் நுழையும் சலுகையை ஜனவரி 1, 2027 முதல் மலேசிய அரசு ரத்து செய்கிறது.

இந்தியர்கள் விசா இன்றி மலேசியாவிற்குள் நுழையும் சலுகையை ஜனவரி 1, 2027 முதல் மலேசிய அரசு ரத்து செய்கிறது. இனி மலேசியா செல்லும் அனைத்து இந்தியர்களும் பயணத்திற்கு முன்பே விசா பெற்றிருக்க வேண்டும். இதுவரை சுற்றுலா, வணிகம் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்காக இந்தியர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

புதிய விதிமுறையின்படி, டிசம்பர் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வ MyVISA இணையதளம் வழியாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். சுற்றுலா விசா சலுகையைப் பயன்படுத்தி மலேசியாவிற்கு சென்று, அங்கு சட்டவிரோதமாக வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author