ஷி ச்சின்பிங்-டிரம்பு சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பை 19ஆம் நாள் பிற்பகல் ஷென்சேன் நகரில் சந்தித்தை பேசினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், நானும் தலைவர் டிரம்பும் ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிலைத்தன்மை வாய்ந்த சீன-அமெரிக்க உறவை உருவாக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். இது இரு நாட்டு மக்கள் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இரு நாட்டுறவைப் பாதிக்காமல் தவிர்க்கும் வகையில் தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சரியான திசை நோக்கி செயல்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவுத்துறையில் பாதுகாப்பு அபாயத்தைத்தடுக்கும் வகையில், இரு நாடுகள் பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுபடுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்பு கூறுகையில், தலைவர் ஷியுடன் நெருக்கமான பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகின்றேன். நமது நட்புறவு நாளுக்கு நாள் ஆழமாகிவருகின்றது என்று தெரிவித்தார். அமெரிக்கா வலுவான நாடாகும். சீனாவும் வலுவான நாடாகும். இரு நாடுகள் உலக அமைதி மற்றும் நிதானத்துக்குக் கூட்டாக வழிக்காட்டி முன்னேற்ற வேண்டும் என்று டிரம்பு கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author