சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங்லியுவான் அம்மையார், ஏபெக்கின் 33ஆவது தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொருளாதாரங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் மனைவிகளுடன் 19ஆம் நாள் முற்பகல் ஷென்சென் விரிகுடா பண்பாட்டுத் துக்கத்தில் “லிங்நான் அருவமான கலாச்சார பாரம்பரியங்களின் பரப்பு மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பிலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.
பெங்லியுவான் அம்மையார் விருந்தினர்களுடன் உளமார்ந்த முறையில் பரிமாற்றம் மேற்கொண்ட போது, பல்வேறு தரப்புகளுடன் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். சீன தேசத்தின் பாரம்பரிய பண்பாட்டின் நீண்டகால வரலாறு மற்றும் ஆழமான பண்பாட்டுப் பின்னணியை விருந்தினர்கள் வெகுவாக மதிப்பிட்டநர்.
