சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் 19ஆம் நாள் பிற்பகல் முத்தரப்புச் சந்திப்பை நடத்தினர்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், மனிதகுலச் சமூகம் எப்போதும் அமைதியை எதிர்பார்க்கின்றது. முக்கிய நாடுகளுக்கிடையில் அமைதி நிலவினால், உலகம் பாதுகாப்பாக இருக்கும் என்று வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது என்றார்.
மனிதகுலம் ஒரே பூகோள ஊரில் வாழ்கின்றது. இந்த ஊரில் முக்கிய நாடுகள் சிறப்பான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் கூறினார். முக்கிய நாடுகள் சரியான முறையில் தொடர்பு கொள்வது ஒரு தேர்வு அல்ல. மாறாக கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விசயமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முக்கிய நாடுகள் எப்படி பழக வேண்டும் என்பது பற்றியும் உலக அமைதிக்கு சீரான அடிப்படையை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும் ஷி ச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார். பரஸ்பர மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு நலன்களைப் பெறுதல், பேச்சுவார்த்தை மூலம் கலந்தாய்வு மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
