சீன-ரஷிய-அமெரிக்கத் தலைவர்களின் அமைதிக்கான பிரகடனம்

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் 19ஆம் நாள் பிற்பகல் அமைதிக்கான பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர்.

இதில், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகியவை ஐ.நாவின் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

நிலையான எரியாற்றல் புழக்கத்தின் முக்கியத்துவத்தை 3 நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க 3 நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

நாடுகளின் ஒப்புதல் கொள்கையின் கோட்பாடு மற்றும் அரசு அதிகாரிகளின் விலக்குரிமைக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை 3 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. சர்வதேச குற்றமியல் நீதிமன்றம் உள்ளிட்ட வாரியங்கள் நிர்வாக உரிமையைத் தவறாகப் பயனப்டுத்தக் கூடாது என்று 3 நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாகக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், அணு ஆயுத அபாயத்தைக் குறைத்து, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது பற்றி 3 நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் இந்தப் பிரகடனத்தில் தெவிர்க்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author