அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

Estimated read time 1 min read

போர் இன்னும் முடியவில்லை எனக்கூறி ஃப்ளைதுபாய் விமான சம்பவத்தை பாராட்டி அல்-கொய்தா கிளை அமைப்பான AQAP தனது வார இதழில் சர்ச்சைக்குரிய தலையங்கம் வெளியிட்டுள்ளது.

ஏமனைத் தளமாகக் கொண்ட அல்-கொய்தா கிளை அமைப்பான AQAP தனது வார இதழில், ‘செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 30-க்கு இடைப்பட்ட காலம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை தொடர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஃப்ளைதுபாய் விமான சம்பவத்தில் துணை விமானியாக செயல்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமியின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்திற்கு எதிராகப் போரிடும் அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற கூட்டுப் படைகளின் விமானங்கள் இன்னும் வானில் பறந்து கொண்டிருக்கின்றன என்றும்,

விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், போர் இன்னும் முடியவில்லை என குறிப்பிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானங்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author