சுவிட்சர்லாந்தின் புதிய கூட்டாட்சி தலைவராக பதவியேற்ற கரின் கெல்லர்-சட்டர் அம்மையாருக்கு ஜனவரி முதல் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவுக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவு ஆண்டாகும். கடந்த 75 ஆண்டுகளில், இரு நாடுகளும் “சமத்துவம், புத்தாக்கம் மற்றும் கூட்டு வெற்றி” என்ற ஒத்துழைப்பு எழுச்சியை நிலைநிறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல்வேறு துறைகளில் பரிமாற்றங்களும் ஒத்துழைப்பும் இடைவிடாமல் புதிய முன்னேற்றங்களைப் பெற்று வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இரு நாட்டு உறவு வளர்ச்சிக்கு தாம் முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஷிச்சின்பிங், கரின் கெல்லர்-சட்டர் அம்மையாருடன் இணைந்து, 75வது ஆண்டு நிறைவை வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் துறையில் ஒன்றுக்குஒன்று நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு புத்தாக்க நெடுநோக்குக் கூட்டாளி உறவு இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிவதைத் தொடர்ந்து முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.