இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை, சீனாவின் சேவை வர்த்தகத்தின் வளர்ச்சி தொடர்ந்து வேகமாக அதிகரித்தது. சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 6 லட்சத்து 12 ஆயிரத்து 558 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 14.6 விழுக்காடு அதிகமாகும். இதில் ஏற்றுமதி தொகை 16.6 விழுக்காடு அதிகரித்து, 2 லட்சத்து 54 ஆயிரத்து 491 கோடி யுவானை எட்டியது. இறக்குமதி தொகை, 13.2 விழுக்காடு அதிகரித்து, 3 லட்சத்து 58 ஆயிரத்து 67 கோடி யுவானை எட்டியது.
அந்த காலத்தில் அறிவுகள் செறிந்த சேவை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்தது. அதோடு, சுற்றுலா சேவை தொடர்ந்து உயர் வேக அதிகரிப்பை நிலைநிறுத்தியது. இதன் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 94 கோடி யுவானை எட்டியது. அதிகரிப்பு விகிதம் 41.2 விழுக்காடாகும்.