விஜயின் ஜனநாயகன் ரிலீஸ் மீண்டும் தாமதம்? ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்  

Estimated read time 0 min read

நடிகர் விஜய் நடித்து, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு திரையிடல் இன்று (மார்ச் 9) ரத்து செய்யப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி இன்று மதியம் 2 மணிக்கு ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வுக் குழுவினருக்குத் திரையிடப்பட வேண்டியிருந்தது.
ஆனால், குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்தத் திரையிடல் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், மார்ச் 19ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author