ஐ.நாவின் சீனப் புத்தகக் கழகம் மற்றும் ஃபாங் ஜின்லோங் பாரம்பரிய சீன இசைக் குழு இணைந்து நடத்திய பாரம்பரிய சீன இசை நிகழ்ச்சி, 7ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி, பாரம்பரிய சீன இசைக் கருவிகள், தேசிய இன நடனங்கள், சிச்சுவான் நாடகத்தின் முகமாற்றம் நிகழ்ச்சி உள்ளிட்ட கலை கூறுகளை ஒன்றிணைத்து, பார்வையாளர்களுக்குப் பாரம்பரிய சீன இசையின் அழகைக் காட்சிப்படுத்தி, நாகரிகங்களுக்கு இடையிலான பரஸ்பரக் கற்றல் மற்றும் அமைதியான சகவாழ்வை வெளிப்படுத்தியது.
