சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஆகஸ்டு 27ஆம் நாள் முற்பகல் செயதியாளர் கூட்டம் நடத்தியது. சீனாவின் சேவை வர்த்தக வளர்ச்சி மற்றும் 2025ஆம் ஆண்டின் சேவை வர்த்தகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து, தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் சேவை துறையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8 விழுக்காடு அதிகரித்து, புதிய சாதனையைப் பெற்றது என்றார்.
மேலும், 2025ஆம் ஆண்டின் சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் 10 முதல் 14ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 190க்கும் மேலான புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சாதனைகள் காட்சிக்கு வைக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, பசுமையான புத்தாக்கம் உள்ளிட்ட முன் மாதிரிப் பொருட்களும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
