பிரதேச அமைதிக்கு முக்கிய அச்சுறுத்தலாக ஜப்பான் மாறியுள்ளது: சீனா

ஐ.நா. பொதுப் பேரவையின் 81ஆவது கூட்டத்தொடரில் 8ஆம் நாள் நடைபெற்ற ஆயுதக்குறைப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு கமிட்டியின் பொது விவாதத்தில் சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவருமான சுன் சியாவ்போ கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போதைய ஜப்பானிய நிர்வாகம் மறு இராணுவமயமாக்கலை விரைவுபடுத்துவதாகவும், பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் முக்கியக் காரணியாக ஜப்பான் மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை ஆழமாக மீளாய்வு செய்து, இராணுவ வாதத்திலிருந்து முழுமையாக விடுபடவும், மறு இராணுவமயமாக்கல் செயல்களைக் கைவிட்டு, அணு ஆயுதப் பரவல் தடுப்புக்கான சர்வதேச சட்டக் கடமைகளை முற்றிலும் செயல்படுத்தவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author