இலகு ரகத் தொழிற்துறையின் புத்தாக்கச் சாதனைகள் மாநாடு நடைபெற்றது
இலகு ரகத் தொழிற்துறையின் புத்தாக்கச் சாதனைகள் மாநாடு அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இலகு ரகத் தொழிற்துறையின் சமீபத்திய சாதனைகள் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்படுகின்றன.
உணவுப் பொருட்கள், வீட்டு உபயோக மின் சாதனங்கள் முதலிய 29 தொழிற்துறைகளைச் சேர்ந்த 259 புத்தாக்க மற்றும் மேம்பாட்டு உற்பத்திப் பொருட்கள் இந்த முறை வெளியிடப்பட்டன.
அடுத்த கட்டமாக, தொழில் நிறுவனங்கள், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நுகர்வோர் தேவையை துல்லியமாக அறிந்து, உயிரியல் தயாரிப்பு மற்றும் எம்பொதிட் நுண்ணறிவு முதலிய எதிர்கால தொழிற்துறைகளுக்கான வளர்ச்சிப் பாதையில் காலடியெடுப்பதற்கு முக்கியமாக வழிகாட்டும் என்று சீன இலகு ரகத் தொழிற்துறையின் சம்மேளனத் தலைவர் ஜாங் சோங்ஹெ தெரிவித்தார்.
வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள், வீட்டு சாமான்கள், தோல் முதலிய தொழிற்துறைகளின் ஏற்றுமதி உலக சந்தையில் 40 விழுக்காடாகும் என்று தெரிய வருகின்றது.