பிலிப்பைன்ஸ் கடல் படை-4409 என்ற கப்பல், அக்டோபர் 8ம் நாள் ரேன் ஐ தீவின் அருகில் சட்டவிரோதமான முறையில் தரைதட்டிய கப்பலிலிருந்து காயமடைந்த ஒருவரை இடமாற்றம் செய்தது. மனித நேய அடிப்படையில், சிறிய கப்பல் மூலம் பிலிப்பைன்ஸ் காயமுற்றோரின் இடமாற்றத்துக்கு உதவச் சீனா உடனடியாக அனுமதி அளித்துள்ளது. இச்சம்பவத்தின் போது சட்ட விதிமுறைகளைப் பின்பற்றிய சீனக் கடற்படை, பிலிப்பைன்ஸுக்குத் தேவையான வசதிகளையும் வழங்கியுள்ளது. ஆனால், பிலிப்பைன்ஸ் தரப்பு, உண்மைகளைத் திரித்துக் காட்டி, தவறான தகவல்கள் மூலம் பொது மக்களைத் திசைதிருப்ப முயன்று வருகிறது. ரேன் ஐ தீவு உள்ளிட்ட நன்ஷா தீவுக்கூட்டம், அவற்றின் அருகிலுள்ள கடற்பரப்பு ஆகியவற்றின் மீது சர்ச்சைக்கே இடமின்றி சீனாவுக்கு அரசுரிமை உண்டு. எனவே, இது போன்ற ஆத்திரமூட்டல் மற்றும் பொய்யான பரப்புரையை பிலிப்பைன்ஸ் உடனே நிறுத்த வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
