புதிய தர உற்பத்தித் திறன்களை வளர்ப்பது தொடர்பான வழிக்காட்டு ஆலோசனைகள் வெளியீடு

புதிய தர உற்பத்தித் திறன்களை வளர்ப்பது தொடர்பான வழிக்காட்டு ஆலோசனைகள் என்ற ஆவணத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும், சீன அரசவையும் வெளியிட்டது.

இதில் புதிய தர உற்பத்தித் திறன்களுக்கு ஏற்ற உற்பத்தி உறவை உருவாக்குவதை விரைவுபடுத்தி, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தையும் தொழில் புத்தாக்கத்தையும் ஆழமாக ஒருங்கிணைப்பதற்குத் துணை புரியும் சிறந்த வளர்ச்சிச் சூழலை உருவாக்கி, உயர் தர வளர்ச்சிக்கு மேலும் செவ்வனே ஆதரவளிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவியல் தொழில் நுட்பம் புத்தாக்கம், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் மற்றும் தொழில் புத்தாக்கத்தின் ஆழமான ஒருங்கிணைப்பு, வளர்ச்சி வழிமுறைப் புத்தாக்கம், அமைப்பு முறை புத்தாக்கம், திறமைசாலிப் பணி முறைப் புத்தாக்கம் ஆகிய 5 துறைகள் பற்றி, இந்த ஆவணத்தில் 19 முக்கிய நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

You May Also Like

More From Author