பண்பாடு பற்றிய ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் முதல் மற்றும் 2ஆம் தொகுதிகளுக்கான கலந்துரையாடல்

பண்பாடு பற்றிய ஷிச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் முதல் மற்றும் 2ஆம் தொகுதிகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லி ஷுலெய் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

பண்பாடு தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனையை மேலும் ஆழமாக அறிந்து கொள்வது, புதிய யுகத்தில் சித்தாந்த அரசியல் பணி மற்றும் பண்பாட்டுப் பணிக்கு வழிக்காட்டல் செய்யும் அடிப்படையாகும். இது, மார்க்சிசம் பண்பாட்டுக்கு கோட்பாட்டுக்குப் புதிய பங்கு ஆற்றி, பண்பாட்டு வலிமை மிக்க நாட்டின் கட்டுமானத்தின் நெடுநோக்கு ஏற்பாடாக திகழ்கிறது. நாம், இப்படிப்பின் பயனை பெற்று பண்பாட்டு வலிமை மிக்க நாட்டின் கட்டுமானத்தை முன்னேற்ற நடைமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author