பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்விக்கான யுனெஸ்கோ விருது வழங்கும் விழாவில் பெங்லியுவான் உரை

Estimated read time 0 min read

பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்விக்கான யுனெஸ்கோ விருது வழங்கும் விழா, அக்டோபர் 9ம் நாள் பாரிஸில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இணையரும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்கான யுனெஸ்கோ அமைப்பின் சிறப்பு தூதருமான பெங்லியுவான் அம்மையார் இவ்விழாவில் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.

மொராக்கோ மற்றும் பெரு நாட்டைச் சேர்ந்த விருது பெற்ற அமைப்புகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, யுனெஸ்கோ உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பன்னாட்டு மகளிருக்கு நன்மை அளிப்பதில் சீனா எப்போதும் முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்தார். சர்வதேச சமூகம், மகளிர் தொழில் கல்வி மற்றும் பயிற்சியை வலுப்படுத்தி, மகளிருக்கான எண்ணிய நுண்ணறிவு கல்வியைப் பெரிதும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author