ஆஸ்திரியாவில் சீனாவின் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிக் குழு

சீனச் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்துள்ள சீனத் தொழில் முனைவோர் பிரதிநிதிகள் குழு, மார்ச் 13ஆம் நாள் முதல் 16ஆம் நாள், ஆஸ்திரியாவில் பயணம் மேற்கொண்டது.

இக்குழு, உள்ளூர் அரசியல் மற்றும் வணிகத் துறையினர்கள், ஐ.நாவின் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதலியோருடன் விரிவான பரிமாற்றங்களை மேற்கொண்டது.

வாகன தயாரிப்பு, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்கள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக பரிமாறிகொண்டு, பல ஒத்துழைப்பு விருப்பங்களை எட்டியுள்ளனர்.

சீனாவில் நடைபெறவுள்ள 3ஆவது சங்கலி பொருட்காட்சியில் கலந்துகொள்ள ஆஸ்திரியாவின் தொழில் மற்றும் வணிக துறை கலந்துகொள்ள இம்மன்றத்தின் தலைவர் ரென்ஹாங்பி வரவேற்பு தெரிவித்தார்.

மேலதிகமான சீன நிறுவனங்கள் ஆஸ்திரியாவில் முதலீடு செய்து தொழில்களை நடத்த அந்நாட்டின் தொழில் மற்றும் வணிக துறையினர் தங்களது  எதிர்ப்பார்ப்பைத் தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author