அண்மையில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆலோசனைப் அமைப்புமுறைக்கான 2வது முறையான கூட்டத்தை நடத்தி, பயனுள்ள முறையில் விவாதித்து, சாதனைகள் மற்றும் பொது கருத்துக்களின் பட்டியலை உருவாக்கின. உலக வர்த்தக அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், இரு தரப்புகளின் கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கையாண்டு, இரு தரப்புப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவைத் தொடர்ந்து நிதானப்படுத்த வேண்டும் என்று இரு தரப்புகள் மீண்டும் வலியுறுத்தின. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்திய கருத்து கணிப்பின்படி, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் கட்டமைப்பு சீர்திருத்தப் பிரச்சினையை, பாதுகாப்புவாதம் தீர்க்க முடியாது. அதற்கு மாறாக, சர்வதேச வர்த்தக சூழ்நிலையை இது மோசமாக்கும் என்று இக்கருத்து கணிப்பில் பங்கெடுத்த 82.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், வர்த்தக பாதுகாப்புவாதம், ஐரோப்பிய தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றலைக் குறைக்கும் என்று 82.6 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். பிற நாடுகளின் மீது கூடுதலாக சுங்க வரி வசூலிப்பது, ஐரோப்பிய நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கருத்து வேற்றுமைகளைத் தீவிரமாக்கும் என்று 85.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
சீனா, ஐரோப்பாவின் கூட்டாளியாகும். எதிரி அல்ல. ஐரோப்பாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறவுகோல், சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்வது இல்லை. அதற்கு மாறாக, சீனாவுடன் யதார்த்த ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
