13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டம் தொடக்கம்

13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு பெய்ஜிங் சியாங்ஷன் மன்றம் நிறுவப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவாகும் என்றார். உலகளாவிய பாதுகாப்பு முன்மொழிவைக் கூட்டாகச் செயல்படுத்தவும், மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் மேலதிக பங்களிப்பை வழங்கவும், பல்வேறு நாடுகளின் ராணுவ படைகளுடன் இணைந்து பணியாற்ற சீன ராணுவம் விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.

நிலைத்தன்மைக்கான ஒருமித்த கருத்தை உருவாக்கி பாதுகாப்பு நிர்வாகத்தைக் கூட்டாக ஊக்குவிப்பது என்ற தலைப்பிலான நடப்பு மன்றக்கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சுமார் 2000 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

You May Also Like

More From Author