உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை…! ஜெலன்ஸ்கியை நேரடியாகச் சாடிய டிரம்ப்…

Estimated read time 1 min read

உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதில் தற்போதைய அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யக்கூடிய புதிய தலைவர் உக்ரைனுக்குத் தேவை என்று கூறினார். மேலும், 2022-ஆம் ஆண்டு தொடங்கிய போர் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அப்போது தாம் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ரஷியாவிலிருந்து டீசல் ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை அமெரிக்கா தளர்த்திய நடவடிக்கையை ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது ரஷியாவுக்கு வருவாய் கிடைக்க வழிவகுக்கும் என்பது உக்ரைனின் கவலையாக உள்ளது.

டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த முடிவும், ஜெலன்ஸ்கி மீதான அவரது விமர்சனமும் அமெரிக்கா–உக்ரைன் உறவுகளில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன.

You May Also Like

More From Author