வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அதிபர் டிரம்ப் அதிரடி காட்டி இருக்கிறார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்கு வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒப்புக்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைக்கு ஏற்ப எங்கள் வரிகளை குறைப்பதற்காக நாங்கள் விரைவாகச் செயல்பட்டுள்ளோம்.
நிச்சயமாக, எங்கள் வர்த்தகப் பங்காளிகளும் அவ்வாறே செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.தென் கொரியா அமெரிக்காவுடனான தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை.
2025ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி அதிபர் லீயும் நானும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சிறந்த ஒப்பந்தம் மேற்கொண்டோம். 2025ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி நான் கொரியாவில் இருந்தபோது இந்த விதிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்தினோம். கொரிய சட்டசபை ஏன் இதை அங்கீகரிக்கவில்லை?கொரிய சட்டசபை (Legislature) எங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இன்னும் சட்டமாக்காததால், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றாலும், நான் இதன்மூலம் தென் கொரியாவின் கார்கள், மரக்கட்டைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மற்ற அனைத்து பரஸ்பர வரிகளையும் 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி உள்ளேன்.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
