சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வகம் தலைமையில், சீன வளர்ச்சி ஆய்வு நிதியம் ஏற்பாடு செய்த சீன வளர்ச்சி பற்றிய உயர் நிலை மன்றத்தின் 2025 ஆண்டு கூட்டம் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.
வளர்ச்சி ஆற்றலை பன்முகங்களிலும் முழுமையாக திறந்து விடுதல் மற்றும் உலக பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவது என்ற தலைப்பில் இரு நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது.
சர்வதேச நிறுவனங்கள், உலகின் முதல் 500 தொழில் நிறுவனங்கள், உலக வணிக மற்றும் தொழிற்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 100க்கும் மேலான பிரதிநிதிகள், இதில் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.