சீன-அமெரிக்க இளைஞர் தலைவர்களின் உரையாடல் என்னும் நிகழ்வு ஜூலை 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனா மற்றும் அமெரிக்காவின் சுமார் 50 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200க்கும் மேலான இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இளைஞர்களின் பரிமாற்றம், காலநிலை மாற்றம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, இளைஞர் பிரதிநிதிகள் விவாதம் நடத்தி, ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை அதிகரித்துள்ளனர்.
மேலும், பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவை அவர்கள் முன்வைத்ததோடு, உலக வளர்ச்சிக்கு இளைஞர்களின் திறமையை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரங்களாக, அமெரிக்காவின் இளைஞர்கள், பெய்ஜிங், ஷாங்காய், ஷான்ஷி உள்ளிட்ட இடங்களில் பயணம் மேற்கொண்டு, சீனா பற்றி நன்றாக அறிந்து கொண்டனர்.