பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..!

Estimated read time 0 min read

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அக்டோபர் 19 (திங்கள்) ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 20 (செவ்வாய்) விஜயதசமி அரசு விடுமுறைகளுடன் முந்தைய சனி, ஞாயிறு வார விடுமுறையும் சேர்வதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அமைகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார விடுமுறைகளுடன் சேர்த்து அக்டோபர் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜூன் மாதத்தில் 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை கிடைத்தது. வார விடுமுறை சேர்த்தால் 12 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. இதைவிட ஜூலை மாதத்தில் ஒருநாள் கூட அரசு விடுமுறை கிடைக்கவில்லை. சனி, ஞாயிறு வார விடுமுறையை மொத்தம் சேர்ந்தால் ஜூலை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விடுமுறை கிடைத்தததால் சந்தோஷத்தில் இருந்தனர். அதாவது ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினம், 26ம் தேதி மிலாடி நபி ஆகிய இரண்டு நாட்கள் அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை என மொத்தமாக கணக்கிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் 11 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தது. செப்டம்பர் மாதத்தில் பார்த்தால் 04ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி என இரண்டு நாட்கள் மட்டுமே அரசு பொது விடுமுறை வந்தது. மேலும் சனி, ஞாயிறு வார விடுமுறையை சேர்ந்தால் மொத்தமாக 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

இந்நிலையில் காலாண்டு விடுமுறையை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. 19ம் தேதி திங்கள் ஆயுத பூஜை, 20ம் தேதி செவ்வாய் கிழமை விஜய தசமி விடுமுறை வருகிறது. அதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன. அக்டோபர் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author